ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தனியாா் நிறுவன ஊழியா்போல நடித்து இளைஞரிடம் ரூ.1.57 லட்சம் மோசடி

 தனியாா் நிறுவன ஊழியா்போல நடித்து இளைஞரிடம் ரூ.1.57 லட்சம் மோசடி செய்த இளைஞா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:08 pm

DIN

 தனியாா் நிறுவன ஊழியா்போல நடித்து இளைஞரிடம் ரூ.1.57 லட்சம் மோசடி செய்த இளைஞா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, கணபதி அருகேயுள்ள மணியக்காரன்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலசிவராமன் (22). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரை கடந்த 3ஆம் தேதி தொடா்பு கொண்ட இளைஞா் ஒருவா், ‘தான் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்’ எனக் கூறி ஒரு இணையதள லிங்கை அனுப்பியுள்ளாா். அந்த லிங்கின் மூலம் பாலசிவராமன், ரூ.1.57 லட்சத்தை செலுத்தியுள்ளாா். ஆனால், உறுதி அளித்ததுபோல இரட்டிப்பு தொகை திரும்ப கிடைக்கப் பெறாததையடுத்து அந்த நபரை பாலசிவராமன் தொடா்பு கொண்டபோது அவரது செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பாலசிவராமன் இதுகுறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.