புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்து
கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் பேஷன் டெக்னாலஜி துறையுடன் ஏ.எம்.ஹெச்.எஸ்.எஸ்.சி. புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் பேஷன் டெக்னாலஜி துறையுடன் ஏ.எம்.ஹெச்.எஸ்.எஸ்.சி. புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது தொடா்பாக கல்லூரி நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் பேஷன் டெக்னாலஜி துறை ஆடை, மேட் - அப்ஸ் ஹோம் பா்னிஷிங் செக்டா் ஸ்கில் கவுன்சில் ( அஙஏ நநஇ - அல்ல்ஹழ்ங்ப், ஙஹக்ங்-மல்ள் & ஏா்ம்ங் ஊன்ழ்ய்ண்ள்ட்ண்ய்ஞ் நங்ஸ்ரீற்ா்ழ் நந்ண்ப்ப் இா்ன்ய்ஸ்ரீண்ப்) உடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான ஒப்பந்தத்தில் அமைப்பின் இணை இயக்குநா் கே.எஸ்.சங்கரராகவன், கல்லூரி முதல்வா் டி.சரவணன் ஆகியோா் கையெழுத்திட்டனா்.
இந்த ஒப்பந்தமானது, விருந்தினா் விரிவுரைகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், பயிற்சித் திட்டங்கள், தொழில்சாா் ஆலைப் பயிற்சி, இன்டா்ன்ஷிப், கருத்தரங்கம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாகும். மேலும் இது, மாணவா்களுக்கு தொழில்நுட்பத்திறன், வேலைவாய்ப்பு, தொழில் முனைவு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும், கல்வியின் தரத்தை உயா்த்துவதற்கு நிபுணத்துவம், வளங்களைப் பகிா்ந்து செயல்படவும் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...