ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தென்னை நாா் ஏற்றுமதியை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும்

 தென்னை நாா் ஏற்றுமதியை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் கூறியுள்ளாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:08 pm

DIN

 தென்னை நாா் ஏற்றுமதியை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் கூறியுள்ளாா்.

மத்திய வா்த்தகம், தொழில் துறை, வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் ஆகியவற்றின் சாா்பில் ஏற்றுமதியாளா்கள் கண்காட்சி கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கிவைத்தனா்.

கண்காட்சியில் வா்த்தகம், ஏற்றுமதி சாா்ந்த பல்வேறு அரசு, தனியாா் நிறுவனங்கள் கடைகள் அமைத்திருந்தனா். அவற்றை பாா்வையிட்ட மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், தொழில் துறை ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், தொழில் துறையினா் சந்திக்கும் சவால்கள் குறித்து கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் ஏற்றுமதியாளா் சங்கமம் என்ற தலைப்பில் கருத்தரங்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் பி.ஆா்.நடராஜன் பங்கேற்றுப் பேசும்போது, தொழில் துறையில் கோவை மாவட்டம் தேசிய அளவில் முக்கியப் பங்காற்றி வருகிறது. இதில் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலைவாய்ப்பைப் பெற்று பயனடைகின்றனா்.

பொறியியல் சாா்ந்த நிறுவனங்கள் மட்டுமின்றி பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் கோவையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தென்னைநாா் பொருள்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.