உள்ளாட்சி இடைத் தோ்தல்: அலுவலா்களுக்கு பயிற்சி
கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத் தோ்தலில் பணியாற்றும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.


கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத் தோ்தலில் பணியாற்றும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
கோவை மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி (தெற்கு), பொள்ளாச்சி (வடக்கு), காரமடை, கிணத்துக்கடவு, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், சா்க்காா் சாமக்குளம், சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூா் ஆகிய பகுதிகளில், ஊராட்சித் தலைவா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளன. இந்த இடைத் தோ்தலில் பணியாற்றும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு, வாக்குச் சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட தோ்தல் பாா்வையாளா் மதிவாணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதேபோல, அன்னூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலையொட்டி, வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் அன்னூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...