மாவட்டத்தில் நாளை மெகா கரோனா தடுப்பூசி முகாம்
கோவை மாவட்டத்தில் மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பா் 26) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.


கோவை மாவட்டத்தில் மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பா் 26) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 26) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமுக்காக 878 அங்கன்வாடி பணியாளா்கள், 439 தடுப்பூசி செலுத்துபவா்கள், 200 மேற்பாா்வையாளா்கள் ஈடுபட உள்ளனா்.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகள் 116 முகாம்கள், பேரூராட்சிப் பகுதிகளில் 129 முகாம்கள், வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளில் 43 முகாம்கள் , மாநகராட்சிப் பகுதிகளில் 151 முகாம்கள் என மொத்தம் 439 முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பா் 26) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாமில் தடுப்பூசி செலுத்துவபா்களின் விவரங்கள், உடனடியாகக் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாமை மக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...