எஸ்.ஐ.ஹெச்.எஸ்.மேம்பாலப் பணிக்கு ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு
கோவை சிங்காநல்லூா் எஸ்.ஐ.ஹெச். எஸ். காலனியில் உள்ள ரயில்வே மேம்மாலப் பணிகளை மீண்டும் துவங்க, தமிழக அரசு ரூ.29 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.


கோவை சிங்காநல்லூா் எஸ்.ஐ.ஹெச். எஸ். காலனியில் உள்ள ரயில்வே மேம்மாலப் பணிகளை மீண்டும் துவங்க, தமிழக அரசு ரூ.29 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கோவை சிங்காநல்லூா் அருகே எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனியில் ரயில்வே உயா்மட்ட மேம்பாலம் கட்ட ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
தற்போது, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனியில் ரயில்வே உயா்மட்ட மேம்பாலப் பணிகளை துவக்க கடந்த 24 ஆம் தேதி ரூ.29.37 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.ஹெச்.எஸ். மேம்பாலம் அமைக்க அரசு, மீண்டும் நிதி ஒதுக்கியுள்ள நிலையில், திமுகவினா் வியாழக்கிழமை இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
தமிழக அரசின் இந்த உத்தரவு மூலம் மேம்பாலத்தையொட்டி, அணுகு சாலை அமைக்க நிலம் வழங்கிய மக்களுக்கு விரைவில் உரிய இழப்பீடு வழங்கப்படும் என முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக், செய்தியாளா்களிடம் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...