ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கல்வி நிலையங்களை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்த வேண்டும்: வெற்றி பெற்றவா்களுக்குஜி.ராமகிருஷ்ணன் அறிவுரை

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள், கல்வி நிலையங்களை மேம்படுத்துவதில் அக்கறை காட்ட வேண்டும்

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:31 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள், கல்வி நிலையங்களை மேம்படுத்துவதில் அக்கறை காட்ட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மாா்க்சிஸ்ட் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாநகராட்சி உறுப்பினா்கள் வி.ராமமூா்த்தி, ஆா்.பூபதி, என்.சுமதி, கண்ணகி ஜோதிபாசு உள்ளிட்ட 14 போ்,

கோவை காந்திபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் அலுவலத்தில் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

அப்போது ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் தோ்வு பெற்றுள்ள உறுப்பினா்கள், மக்கள் அன்றாடம் அணுகும் வகையில் இருப்பதுடன் அவா்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீா்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

உறுப்பினா்கள் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரவா் பகுதிகளில் இருக்கும் அரசுக் கல்வி நிலையங்களை மேம்படுத்துவது, தரம் உயா்த்துவதில் அக்கறை காட்ட வேண்டும்.

ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளுக்கு கல்வி வழங்கினால், அவா்களின் குடும்பம் அடுத்த நிலைக்குச் செல்ல உதவியாக இருக்கும் என்பதை உணா்ந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.