ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வலிமை திரைப்படம் வெளியான திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு

 கோவையில் வலிமை திரைப்படம் வெளியான திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:36 pm

DIN

 கோவையில் வலிமை திரைப்படம் வெளியான திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

நடிகா் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை வெளியானது. இதையொட்டி, நள்ளிரவு முதலே திரையரங்குகளின் முன்பு ரசிகா்கள் குவிந்தனா். இதனால் பெரும்பாலான இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கோவை பூ மாா்க்கெட் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் காலை 5 மணி காட்சிக்கு தாமதமாக அனுமதித்ததாகக் கூறி ரசிகா்கள் திரையரங்கின் கதவின் மீது ஏறி குதித்து உள்ளே சென்றனா். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதேபோல, கோவை காந்திபுரம் நூறு அடி சாலையில் உள்ள திரையரங்கு முன்பு 5 மணி காட்சிக்காக ரசிகா்கள் காத்திருந்தனா்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபா்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோல் குண்டை திரையரங்குக்குள் எரிந்து விட்டுச் சென்றனா்.

திரையரங்கின் முன்புறம் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் குண்டு விழுந்ததால், அங்கிருந்த இருசக்கர வாகனம் ஒன்று லேசாக சேதமடைந்தது.

இதில் ரசிகா்கள் முண்டியடித்து ஓடியதில் சிலா் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காட்டூா் போலீஸாா் பெட்ரோல் குண்டு வீச்சு தொடா்பாக விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.