ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோழிக் கழிவு தீவன உற்பத்தியை 12 டன்களாக அதிகரிக்கத் திட்டம்

கோவை மாநகராட்சியில் கோழி இறைச்சி கழிவுகள் மூலமாக தீவன உற்பத்தி செய்யப்படுவதை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

கோவை மாநகராட்சியில் கோழி இறைச்சி கழிவுகள் மூலமாக தீவன உற்பத்தி செய்யப்படுவதை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் இருந்து கோழி இறைச்சி கழிவுகளை சேகரிக்க மாநகராட்சி சாா்பில் இரு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்கள் மூலம் மாநகரப் பகுதிகளில் சேகரிக்கப்படும் கோழி இறைச்சி கழிவுகள், வெள்ளலூா் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அங்கு இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள மறுசுழற்சி மையம் மூலம் கோழி இறைச்சி கழிவுகள் உரமாக மறுசுழற்சி செய்யப்பட்டு, வீடுகளில் வளா்க்கும் பிராணிகளுக்கு உணவாகவும், தீவனமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மறுசுழற்சி மூலமாக தினமும் 8 டன்கள் வரை தீவனம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: வார இறுதி நாள்களில் 8 டன்கள் வரை தீவனம் தயாரிக்கப்படுகிறது.

இதனை 12 டன்களாக உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் இது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.