ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோவையில் 27 இல் சொட்டு மருந்து முகாம்

கோவை மாவட்டத்தில் 1,569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெறவுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:32 pm

DIN

கோவை மாவட்டத்தில் 1,569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெறவுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

போலியோ பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

அதன்படி நடப்பாண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி மாநிலம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

கோவை மாவட்டத்தில் கிராமப் புறங்களில் 1,190 மையங்கள், நகரப் பகுதிகளில் 379 மையங்கள் என மொத்தம் 1,569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், கோயில்கள் உள்ளிட்ட

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 36 மையங்கள், 18 நடமாடும் சிறப்பு மையங்கள் மூலமும் பொலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இதில் 5 வயதுக்குள்பட்ட 3.37 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத் துறை பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்பட 6 ஆயிரத்து 536 போ் இப்பணியில் ஈடுபடவுள்ளனா்.

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து செலுத்திக்கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.