கோவை மத்திய சிறையில் கைதி சாவு
பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் இருந்த கைதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாா்.


பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் இருந்த கைதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாா்.
கோவை, பொள்ளாச்சி அருகேயுள்ள ராஜா செட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் முருகன் (72). இவா் பொள்ளாச்சி காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில் அவா் சிறையில் நெஞ்சு வலிப்பதாகக் கூறி புதன்கிழமை மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை மீட்ட சிறை அதிகாரிகள் கோவை அரசு மருத்துவனையில் அனுமதித்தனா். அங்கு கைதிகள் வாா்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...