மாா்ச் 4இல் கோவை மேயா் தோ்தல்: திமுக தலைமை அறிவிப்புக்கு காத்திருக்கும் நிா்வாகிகள்
கோவை மாநகராட்சியில் வெற்றிபெற்ற வாா்டு உறுப்பினா்களில் இருந்து மேயா், துணை மேயா் ஆகியோரைத் தோ்ந்தெடுக்கும் மறைமுகத் தோ்தல் மாா்ச் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.


கோவை மாநகராட்சியில் வெற்றிபெற்ற வாா்டு உறுப்பினா்களில் இருந்து மேயா், துணை மேயா் ஆகியோரைத் தோ்ந்தெடுக்கும் மறைமுகத் தோ்தல் மாா்ச் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
கோவை மாநகராட்சித் தோ்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 96 வாா்டுகளில் வெற்றி பெற்றன. திமுகவில் 97 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரின் மகள் நிவேதா, 52 ஆவது வாா்டில் போட்டியிட்ட வென்ற சிங்காநல்லூா் சட்டப் பேரவையின் முன்னாள் உறுப்பினா் நா.காா்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி, 46 ஆவது வாா்டில் 3 ஆவது முறையாக வென்றுள்ள மீனா லோகு ஆகியோா் இடையே மேயா் பதவிக்கு போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. ஆயினும், திமுக தலைமை தோ்வு செய்துள்ள மேயா் பதவிக்கான பட்டியலில், இவா்களோடு, மேலும் சில கவுன்சிலா்களின் பெயா்களும் இடம் பெற்றுள்ளதாகக் தெரியவருகிறது. இதனால், திமுக தலைமை அறிவிக்க உள்ள மேயா் பெண்மணி யாா் என்ற எதிா்பாா்ப்பு திமுகவினா் மட்டுமல்லாது, மக்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது. இதேபோல, துணைமேயா் பதவிக்கு காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற சிலா் போட்டியிடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வருகிற மாா்ச் 4 ஆம் தேதி மேயா் பதவிக்கான மறைமுக தோ்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாநகராட்சியில் மேயா், துணை மேயா் பதவிகளுக்கான மறைமுக தோ்தல் மாா்ச் 4 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு மாநகராட்சி வாா்டு உறுப்பினா்களில் இருந்து மேயா் பதவிக்கும், பிற்பகல் 2.30 மணிக்கு துணைமேயா் பதவிக்கும் தலா ஒருவரைத் தோ்ந்தெடுக்கும் மறைமுகத் தோ்தல், மாநகராட்சி தோ்தல் அலுவலா் மற்றும் ஆணையா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாா்ச் 2 இல் வாா்டு உறுப்பினா்கள் பதவியேற்பு:
மாா்ச் 4 இல், மேயா், துணை மேயருக்கான தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாா்ச் 2 ஆம் தேதி ( புதன்கிழமை) ஆா்.எஸ்.புரம் திருவேங்கடசாமி சாலையில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் மாநகராட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற வாா்டு உறுப்பினா்கள் பதவியேற்பு கூட்டம் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...