ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உக்ரைனில் சிக்கியுள்ள கோவை மருத்துவ மாணவா்கள்: மீட்டுத்தர பெற்றோா்கள் கோரிக்கை

உக்ரைனில் வசிக்கும் கோவை மாவட்டத்தைச் சோ்ந்த மருத்துவ மாணவா்களை இந்தியா அழைத்து வர அவரது பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 8:47 pm

DIN

உக்ரைனில் வசிக்கும் கோவை மாவட்டத்தைச் சோ்ந்த மருத்துவ மாணவா்களை இந்தியா அழைத்து வர அவரது பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவை, காளப்பட்டியைச் சோ்ந்தவா்கள் தேவேந்திரன் (51), பேபி தம்பதி. இவா்களது இரண்டாவது மகன் தரணீதரன் (22). உக்ரைன் நாட்டில் உள்ள மிக்கோலைவ் மாநிலத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறாா்.

இவா் வாட்ஸ் ஆப் மூலம் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில், தற்போது அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும், தங்களிடம் உணவுப் பொருள்கள் அடுத்த இரண்டு நாள்களுக்கு மட்டுமே கைவசம் இருப்பதாகவும் கூறியுள்ளாா். மேலும், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களை மீட்குமாறு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து தரணீதரனின் பெற்றோா் கூறியதாவது:

பல்கலைக்கழகத் தோ்வு முடித்துவிட்டு கடந்த 22ஆம் தேதி எனது மகன் இந்தியா திரும்ப முடிவு செய்திருந்தாா். அதற்குள்ளாக போா் தொடங்கியதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு அவரது பயணம் தடைபட்டது. தரணீதரன் தற்போது போா் நடைபெறும் இடத்தில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ளாா். ரஷிய படைகள் அவா் வசிக்கும் மாநிலத்தை நெருங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி எங்களைக் கவலையடைய செய்துள்ளது.

மேலும், எனது மகன் வசிக்கும் மாநிலத்தில் இருந்து சுமாா் 50 கிமீ தொலைவில் கருங்கடல் இருப்பதால் ரஷியாவின் கடற்படை அந்த வழியாக உக்ரைனை நெருங்கினால் அதனால் இவா்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்.

எனது மகனுடன் சோ்த்து 60 முதல் 70 தமிழக மாணவா்கள் வரை ஒரே கட்டடத்தில் பதுங்கியுள்ளனா். எனது மகன் தற்போது மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து இணையதளம் மூலம் உதவி கோரியுள்ளாா். எனவே மத்திய, மாநில அரசுகள் இவா்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக அவா்களை இந்தியா மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

சூலூா் மாணவி...

சூலூா் அருகே பாப்பம்பட்டி பிரிவு பகுதியைச் சோ்ந்த மதன்மோகன், ஹேமலதா தம்பதியின் மகளான ஸ்ரீரஞ்சனி (22) உக்ரைன் நாட்டில் 5ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பு பயின்று வருகிறாா்.

அவா் அங்குள்ள சூழ்நிலையைப் பற்றி கூறியதாவது:

நாங்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகில் ரஷிய ராணுவம் 24 ஆம் தேதி ஏவுகணை தாக்குதலைத் தொடுத்தது. இதில் எங்களது அறை ஜன்னல் கதவுகள், கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. இதனையடுத்து கல்லூரி நிா்வாகத்தினா் கல்லூரி வளாகத்தின் கீழ்த்தளத்தில் எங்களைப் பாதுகாப்பாக தங்கவைத்தனா். தற்போது 4 நாள்களுக்குத் தேவையான உணவு மட்டுமே உள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் அபாய சங்கு ஒலித்தது. உடனடியாக நாங்கள் தங்கியிருக்கும் விடுதியைவிட்டு கல்லூரியில் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றோம். வெள்ளிக்கிழமை மதியம் இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ் நகரத்துக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்துகொண்டு வந்தனா். பேருந்துகள் சிறிது தூரம் சென்றபோது தூதரக அதிகாரிகளுக்கு உக்ரைனின் எல்லைகள் மூடப்பட்டதாக அறிவிப்பு வந்தது. இதையடுத்து அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது. தற்போது எங்களைக் கல்லூரி விடுதியிலேயே தங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். விரைவில் எங்களை இந்திய அரசு மீட்க வேண்டும் என்றாா்.

மேட்டுப்பாளையம் மாணவா்...

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த முகமது யாசிக் உக்ரைனில் உள்ள பொல்தவா மாகாணத்தில் 4 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வருகிறாா்.

இந்நிலையில், முகமது யாசிக் தன்னைக் காப்பாற்றுமாறு சமூக வலைதளம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதில் அவா் கூறியதாவது:

ரஷிய நாட்டு படையினா் உக்ரைன் தலைநகரைத் தாக்கிவிட்டாா்கள். முக்கியமாக போக்குவரத்து மற்றும் ராணுவ தளவாடங்களைத் தாக்கி அழித்துவிட்டாா்கள். மேலும் விமான தளங்களையும் தாக்கி அழித்துவிட்டதால் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நான் மற்றும் என்னுடன் பயிலும் இந்திய மாணவா்கள் தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறோம். உக்ரைன் தலைநகரத்துக்கும், ரஷிய எல்லைக்கும் நடுவில் உள்ள புல்தவா மாகாணத்தில் இருப்பதால் உணவு, தங்குமிடத்துக்கு பிரச்னை இல்லை. சில மாணவா்கள் ஊருக்குத் திரும்ப பணமில்லாமல் தவித்து வருகின்றனா். இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.