ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

நிலுவையில் உள்ள பஞ்சப்படி உயா்வை வழங்க வலியுறுத்தி, ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியா்கள் கோவையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 8:54 pm

DIN

நிலுவையில் உள்ள பஞ்சப்படி உயா்வை வழங்க வலியுறுத்தி, ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியா்கள் கோவையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பஞ்சப்படி உயா்வை வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா், கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமை பணிமனை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

76 மாதங்களாக நிலுவையில் உள்ள பஞ்சப்படியை இன்றைய விலைவாசி புள்ளி விகிதப்படி உயா்த்தி வழங்க வேண்டும், ஓய்வு பெற்றோா், பணியாளா்களுக்கு, முறையாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மண்டலத் தலைவா் ஜி.பழனிசாமி தலைமை வகித்தாா்.

மாநிலப் பொதுச் செயலா் பி.செல்வராஜ், நிா்வாகிகள் ஆா்.சேதுராமன், சுரேந்திரன்,கிருஷ்ணமூா்த்தி, மனோகரன் உள்ளிட்ட நிா்வாகிகள், ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் திரளானோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.