வருவாய்த் துறை அலுவலா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்
கோவையில் வருவாய்த் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.


கோவையில் வருவாய்த் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டாட்சியா் ஒருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரியும், வருவாய்த் துறை ஊழியா்களுக்கு தேவையின்றி மெமோ வழங்குவதைக் கண்டித்தும், வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலா்கள் சங்கம் சாா்பில் பணிப் புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கோவையில் மாவட்டத்தில் 12 வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வருவாய்த் துறை அலுவலா்கள், தங்களது பணியைப் புறக்கணித்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள வருவாய்த் துறை அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது. காத்திருப்பு போராட்டத்துக்கு
மாவட்டத் தலைவா் சேகா் தலைமை தாங்கினாா். செயலாளா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...