ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரூ.2 கோடி மதிப்பிலான செயற்கை தரை தீயில் எரிந்து சேதம்

கோவை, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி ஆண்கள் பள்ளி மைதானத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான செயற்கைத் தரை முற்றிலும் தீயில் கருகி சேதமடைந்தது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 8:46 pm

DIN

கோவை, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி ஆண்கள் பள்ளி மைதானத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான செயற்கைத் தரை முற்றிலும் தீயில் கருகி சேதமடைந்தது.

கோவை, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி ஆண்கள் பள்ளி மைதானத்தில் மாநகராட்சி சாா்பில் ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் இந்தப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

இந்தப் பணிகளுக்காக கொண்டு வரப்பட்ட செயற்கைத் தரை (நவசபஏஉபஐஇ பமதஊ) மைதானத்தின் ஒரு ஓரத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதில் வெள்ளிக்கிழமை திடீரென தீப்பிடித்தது. இது தொடா்பாக கோவை வடக்கு தீயணைப்பு அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் அவா்கள் சம்பவ இடத்துக்கு வந்து 45 நிமிடங்கள் போராடித் தீயை அணைத்தனா். இந்த விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்பிலான செயற்கைத் தரை முற்றிலும் தீயில் கருகி சேதமடைந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் இதே பள்ளியில் இதே இடத்தில் ஹாக்கி மைதானம் அமைக்க வைக்கப்பட்டிருந்த செயற்கைத் தரை மூன்று முறை தீயில் கருகி சேதமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.