ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் குறித்த கருத்தரங்கு

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் 48 ஆவது அகில இந்திய திராவிட மொழியியல் குறித்த 2 நாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 8:45 pm

DIN

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் 48 ஆவது அகில இந்திய திராவிட மொழியியல் குறித்த 2 நாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை, இந்திய திராவிட மொழியியல் சங்கம், சா்வதேச திராவிட மொழியியல் நிறுவனம், மத்திய இந்திய மொழியியல் நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது.

கருத்தரங்கின் செயலரும் பல்கலைக்கழக மொழியியல் துறைத் தலைவருமான (பொறுப்பு) வி.எம்.சுப்ரமணியன் வரவேற்றாா். சா்வதேச திராவிட மொழியியல் நிறுவனத்தின் இயக்குநா் நடுவட்டம் கோபாலகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினாா்.

இதில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.கதிரேசன், தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வி.திருவள்ளுவன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினா். பாரதியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் பி.காளிராஜ் தலைமை உரையாற்றினாா்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் கே.கருணாகரன் சிறப்புரையாற்றினாா். கேரள பல்கலைக்கழக பேராசிரியா் குஞ்சம்மா நன்றி கூறினாா். முன்னதாக கருத்தரங்க மலரை சிறப்பு விருந்தினா்கள் வெளியிட்டனா். இந்த கருத்தரங்கில் நேரடியாகவும், இணைய வழியிலும் மொழியியல் மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள் பலா் பங்கேற்றனா். இந்த கருத்தரங்கு சனிக்கிழமை நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.