திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தமிழக அரசு விவசாயிகளுக்கு அறிவித்த சலுகை இன்னும் வந்து சேரவில்லை: செல்லமுத்து

தமிழக அரசு விவசாயிகளுக்கு அறிவித்த சலுகை இன்னும் வந்து சேரவில்லை என்று தமிழ்நாடு விவசாய சங்கம் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேட்டியில் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 ஜூலை 2022, 9:29 am

DIN

கோவை: தமிழக அரசு விவசாயிகளுக்கு அறிவித்த சலுகை இன்னும் வந்து சேரவில்லை என்று தமிழ்நாடு விவசாய சங்கம் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விவசாய சங்கம் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த காலத்தில் மின் கட்டண குறைப்பு மற்றும் கடன் நிவாரணம் கோரியும் நடத்தப்பட்ட போராட்டத்தில், உயிரிழந்தவர்களுக்கு ஜூலை 5-ம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கபட்டு வரும் நிலையில், இவ்வாண்டு தொண்டாமுத்தூர் பகுதியில்  அந்நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும் அந்நிகழ்வில் பல்வேறு விவசாய பொருட்கள் விலை குறைவிற்கு அரசு நிவாரணம் கிடைக்கவில்லையென்றால் போராட்ட அறிவிப்பை அறிவிக்க உள்ளதாகவும் கூறினார். மேலும் மழை காலங்களில் தூர்வாரப் படாத இடங்களையெல்லாம் தூர்வார வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழக அரசு வெறும் விளம்பர அரசாகத்தான் இருக்கிறது எனவும், விவசாயிகளுக்காக பட்ஜெட் போடுவதாக கூறும் போது அதனை வரவேற்றதாகவும், ஆனால் இதுவரை விவசாயிகளில் நிலத்திற்கு ஒரு ரூபாய் சலுகை கூட வரவில்லை என்பது தான் உண்மை என தெரிவித்தார். மேலும் பம்புசெட் உற்பத்தியாளர்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயரத்தினால் அது விவசாயிகள் தலையில் தான் விடியும் என்றும் பம்புசெட் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டுமென கேட்டுகொள்வதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.