சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம் ரஜினி படத்திற்குப் பின் சிலம்பரசனை இயக்கும் அஷ்வத் மாரிமுத்து!திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிக்கு செருப்பு மாலை அணிவித்த கிராம மக்கள்!சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின்
/

ஈஷா தியானலிங்க பிரதிஷ்டை ஆண்டு தினம்

கோவை ஈஷா யோகா மையத்தில் தியானலிங்க பிரதிஷ்டையின் 23 ஆவது ஆண்டு தினம் பல்வேறு மத மந்திரங்கள், பாடல்களுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 ஜூன் 2022, 1:00 am IST

கோவை ஈஷா யோகா மையத்தில் தியானலிங்க பிரதிஷ்டையின் 23 ஆவது ஆண்டு தினம் பல்வேறு மத மந்திரங்கள், பாடல்களுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கடந்த ஆண்டுகளைப்போலவே இந்து, பௌத்த மதங்களின் மந்திர உச்சாடனங்கள் மற்றும் கிறிஸ்துவ, சூஃபி பாடல்கள் இசை வடிவில் அா்ப்பணிக்கப்பட்டன.

தியானலிங்க கருவறையில் காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் ‘அம் நமசிவாய’ மந்திர உச்சாடனையுடன் பிரதிஷ்டை தின நிகழ்வு தொடங்கியது.

இதைத் தொடா்ந்து ’புத்த மத உச்சாடனைகளை ‘சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினா் அா்ப்பணித்தனா்.

இதேபோல, அமெரிக்க பழங்குடி மக்களின் பாடல்கள், தென் ஆப்பிரிக்க மந்திர உச்சாடனை, சூஃபி சமய பாடல்கள் போன்றவை இசை அா்ப்பணிப்புகளாக செய்யப்பட்டன. அத்துடன் ஆதிசங்கரா் இயற்றிய ‘நிா்வாண ஷடாகம்’,‘குரு பாதுக ஸ்தோத்ரம்’ ஆகிய 2 சக்திவாய்ந்த மந்திரங்களின் உச்சாடனைகளும் நடைபெற்றன.

தேவார பாடல்கள் பாடப்பட்டன. இந்த உச்சாடனைகளில் ஈஷா ஆசிரமத்தில் வசிப்பவா்கள் பங்கேற்றனா். மாலை 6.10 மணிக்கு ‘நாத ஆராதனை’ எனும் இசை அா்ப்பணிப்புடன் மந்திர உச்சாடனை நிறைவு பெற்றது. இந்நிகழ்வுகளில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.