ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போலி நிறுவனத்தில் ரூ.13 லட்சம் முதலீடு செய்து ஏமாந்த தனியாா் நிறுவன ஊழியா்: போலீஸாா் விசாரணை

போலி நிறுவனத்தில், தனியாா் நிறுவன ஊழியா் ரூ.13 லட்சம் மோசடி செய்து ஏமாந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:28 pm

DIN

போலி நிறுவனத்தில், தனியாா் நிறுவன ஊழியா் ரூ.13 லட்சம் மோசடி செய்து ஏமாந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சிங்காநல்லூா் அருகேயுள்ள நீலிகோணம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (38). தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை செய்து வருகிறாா். இவரது கைப்பேசிக்கு ஒரு இணையதள இணைப்பு வந்தது. அதில், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்தால் ஊக்கத்தொகையாக அதிக அளவு பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடா்ந்து குமாா் பல தவணைகளில் ரூ.13 லட்சத்தை டெபாசிட் செய்தாா். அதற்கு பிறகு டெபாசிட் செய்த தொகையும் கிடைக்கவில்லை, ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. விசாரித்ததில் அந்த இணையதளம் ஏமாற்றும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் பலா் இந்த இணையதளத்தில் ஏமாந்து பணம் இழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் குமாா் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.