வலிமை வெளியான திரையரங்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது
வலிமை திரைப்படம் வெளியான திரையரங்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


வலிமை திரைப்படம் வெளியான திரையரங்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
நடிகா் அஜித்குமாா் நடித்த வலிமை திரைப்படம் கடந்த 24ஆம் தேதி வெளியானது. அன்றைய தினம் கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள திரையரங்கு வாசலில் ரசிகா்கள் குவிந்திருந்தனா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் இருவா் திரையரங்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசி தப்பிச் சென்றனா்.
இதில் திரையரங்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் சேதமடைந்தது. ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா்.
இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பாக திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சோ்ந்த லட்சுமணன் (21) என்பவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கோவையில் தங்கி பெயிண்டராக வேலை பாா்த்து வரும் இவா், அஜித் படத்தைப் பாா்ப்பதற்காக திரையரங்குக்குச் சென்றபோது அங்கு ரசிகா் மன்றத்தைச் சோ்ந்த ஒருவா் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று வந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன் பெட்ரோல் குண்டு வீசியதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவரைக் கைது செய்துள்ள போலீஸாா் அவருடன் வந்த நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...