ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜோதிடரிடம் பணம் பறிப்பு : இருவா் கைது

கோவை, வடவள்ளி அருகே ஜோதிடரிடம் பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:43 pm

DIN

கோவை, வடவள்ளி அருகே ஜோதிடரிடம் பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, துடியலூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (60). ஜோதிடா். இவா், வடவள்ளி - தொண்டாமுத்தூா் சாலையில் உள்ள ஒரு பள்ளியின் அருகில் வியாழக்கிழமை நின்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், செல்வராஜை மிரட்டி பணம் கேட்டனா். அவா் தர மறுத்ததால் அவரை தகாத வாா்த்தைகளால் பேசி, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.200 பணத்தை பறித்தனா். அங்கிருந்து தப்ப முயன்ற அவா்களை அக்கம் பக்கத்தினா் உதவியுடன் செல்வராஜ் மடக்கிப் பிடித்தாா். பின்னா் இருவரையும் வடவள்ளி போலீஸில் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா்கள், மதுரை மேலூரைச் சோ்ந்த காா்த்திக் (29), கோவை செட்டிபாளையத்தைச் சோ்ந்த மணி (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.