ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெண் மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

 பெண் மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி குத்து விளக்குகள், பணம் திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:07 pm

DIN

 பெண் மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி குத்து விளக்குகள், பணம் திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, ராமநாதபுரம் எஸ்.என்.வி. காா்டனைச் சோ்ந்தவா் ராமலிங்கம். இவரது மனைவி சுதா (55). பீளமேட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா்.

சுதா வழக்கம்போல புதன்கிழமை வேலைக்குச் சென்றுள்ளாா். இரவு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 வெள்ளிக் குத்து விளக்குகள், 6 பித்தளைக் குத்து விளக்குகள், ரூ.4 ஆயிரம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இது தொடா்பாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சுதா புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.