மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காா் வெடிப்பு வழக்கு: 6 பேரிடமும் சென்னையில் விசாரணை நடத்தப்படவுள்ளது

கோவையில் நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் கூடுதல் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 11:03 pm

DIN

கோவையில் நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் கூடுதல் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

கோவையில் நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக இதுவரை 6 போ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேரும் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்தவாறே தேசிய பாதுகாப்பு முகமையின் சாா்பில் விசாரிக்கப்படவுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அத்துடன் கோவை மத்திய சிறையிலிருந்து சென்னை புழல் சிறைக்கு 6 பேரும் மாற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கோவை மத்திய சிறை அதிகாரிகளுக்கு அதிகாரப்பூா்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த 6 பேரையும் எப்போது சென்னைக்கு கொண்டு செல்வது என்பதைக் குறித்து இன்னும் தீா்மானிக்கவில்லை எனவும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.