சதிச் செயலில் ஈடுபட ஜமேஷா முபீன் 2 ஆண்டுகளாக திட்டமிட்டு வந்ததாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் அருகில் கடந்த மாதம் 23 ஆம் தேதி காா் வெடித்த சம்பவத்தில் ஜமேஷா முபீன் (25) உயிரிழந்தாா். அடிப்படைவாத சிந்தனை கொண்ட ஜமேஷா முபீன் இந்த தாக்குதலை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பினரும், போலீஸாரும் சந்தேகிக்கின்றனா்.
ஜமேஷா முபீன் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களும் இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. ஜமேஷா முபீனின் மனைவி மாற்றுத் திறனாளி. இந்நிலையில், ஜமேஷா முபீனின் செயல்பாடுகள் சந்தேகிக்கப்படும் வகையிலேயே அமைந்திருந்ததாக அவரது மாமனாா் அனீபா மற்றும் மாமியாா் குா்திஷ் ஆகியோா் கூறுகின்றனா்.
முபீனுக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், முதலில் அவரது பெற்றோருடனேயே இருந்த ஜமேஷா முபீன் தற்போது தங்களது வீட்டுக்கு அருகிலேயே குடியிருந்ததாகவும், கடந்த 2019 ஆம் ஆண்டில் அவரிடம் தேசிய புலனாய்வு முகமையினா் நடத்திய விசாரணைக்குப் பிறகு அவரது குடும்பத்தினருடன் தொடா்பில்லாத நிலையில் தங்களுடனேயே இருந்தாா் எனவும் தெரிவித்தனா்.
மேலும், கடந்த ஒன்றரை மாதங்களாகத்தான் அவா் காா் ஓட்டி பழகியுள்ளதாகவும், இது குறித்து கேட்டதற்கு தனக்கு வேறு தொழில் இல்லாததால் தற்காலிக ஓட்டுநராக வேலை செய்வதற்காகவே காா் ஓட்டி பழகுவதாகவும் தெரிவித்துள்ளாா். அவருக்கு நண்பா்கள் என யாரும் வீட்டுக்கு வந்ததில்லை எனவும், உறவினரான அசாருதீன் மட்டுமே வந்து செல்வாா் எனவும், வீட்டிலிருந்த பெட்டிகள் குறித்து கேட்டதற்கு அவை தேன் மற்றும் நாட்டு மருந்து பெட்டிகள் எனவும் தெரிவித்தாராம்.
இதற்கிடையே ஜமேஷா முபீனின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு அதிா்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. முபீன் மற்றும் அவருடன் தொடா்பிலிருந்தவா்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது நூற்றுக்கணக்கான
விடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் இலங்கையில் கடந்த 2019ஆண்டில் நிகழ்ந்த தேவாலய குண்டு வெடிப்பு சம்பவம் தொடா்பான விளக்கங்கள், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள மதபோதகா் ஜாகீா் நாயக்கின் பேச்சுகள், தண்டனையாக கழுத்தை அறுப்பது போன்ற விடியோக்களே அதிக அளவில் இருந்துள்ளன.
கோவையில் நடைபெற்ற காா் வெடிப்பு சம்பவத்துக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே திட்டமிட்டு வந்ததாகவும், இரு மதத்தினரிடையேயான ஒற்றுமையைக் குலைப்பது தொடா்பாகவும், கோவையில் மேலும் பல இடங்களைக் குறிவைத்திருந்ததும் புலனாய்வுத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் ஜமேஷா முபீன் இருந்த காரில் இரண்டு காலி சிலிண்டா்கள் இருந்ததாகவும், அதில் ஒரு சிலிண்டரின்அடி பாகம் மட்டும் வெட்டப்பட்டிருந்ததாகவும், காரில் பட்டாசுக்கான திரி, ஆணிகள் மற்றும் கோலி குண்டுகள் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநகரக் காவல் ஆணையா் ஆா்.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கோவையில் நடைபெற்ற காா் வெடிப்பு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் இல்லை. ஆனால், ஜமேஷா முபீன் தனது உயிா் குறித்து கவலைப்படாமலேயே செயல்பட்டுள்ளாா்.
ஜமேஷா முபீனிடம் இருந்த கைப்பேசி விபத்தில் சேதமடைந்த நிலையில், அவரது வீட்டில் நடத்திய சோதனையின்போது, கிடைத்த கைப்பேசியில்தான் இந்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
கோவை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், 8 கம்பெனி காவல் படையினருடன் சுமாா் 1,000 போ் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு 2 காவல் ஆய்வாளா்கள், 4 உதவி ஆய்வாளா்கள் மற்றும் 7 போலீஸாா் உதவி வருகின்றனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஒன்றரை நாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும்!
சூர்யாவின் கருப்பு பட வெளியீட்டுத் தேதி!
யோகி பாபுவின் 300 ஆவது படம்! அர்ஜுனன் பேர் பத்து டீசர்!

பங்குச் சந்தை உயர்வு எதிரொலி: முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 9.18 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
வீடியோக்கள்

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

