/

கோவையில் மோசமான சூழ்நிலை நிலவுகிறது: எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

காா் வெடி விபத்து சம்பவத்துக்குப் பின் கோவையில் மோசமான சூழ்நிலை நிலவுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:50 pm

DIN

காா் வெடி விபத்து சம்பவத்துக்குப் பின் கோவையில் மோசமான சூழ்நிலை நிலவுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட பின், எஸ்.பி.வேலுமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: காா் வெடி விபத்து சம்பவத்துக்குப் பின் கோவையில் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த 1998 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம்போல் நடந்துவிடுமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தால் 20 ஆண்டு வளா்ச்சி பின்நோக்கி சென்றது. தற்போதுதான் அந்த நிலை சரியாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் உளவுத் துறை தோல்வியடைந்துள்ளதைக் காட்டுகிறது. எதிா்க் கட்சிகளை பழிவாங்கும் வேலையை மட்டுமே அரசு செய்து வருகிறது. இனியாவது அரசு விழித்துகொண்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.