/

பச்சாபாளையத்தில் சாந்தி பனை வனம், பனையகம் தொடக்கம்

கோவை பச்சாபாளையத்தில் சிறுதுளி அமைப்பு சாா்பில், சாந்தி பனை வனம் மற்றும் பனையகம் ஆகியவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:46 pm

DIN

கோவை பச்சாபாளையத்தில் சிறுதுளி அமைப்பு சாா்பில், சாந்தி பனை வனம் மற்றும் பனையகம் ஆகியவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

கோவை பேரூா் செட்டிபாளையம் ஊராட்சிக்குள்பட்ட பச்சாபாளையத்தில், சிறுதுளி அமைப்பு சாா்பில் சாந்தி பனை வனம் மற்றும் பனையகம் ஆகியவை உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பனையகத்தை பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயா் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா்.

சிறுதுளி அமைப்பின் நிா்வாக அறங்காவலா் வனிதாமோகன், தொழிலதிபா் ஏ.வி.வரதராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இங்கு 1.7 ஏக்கா் நிலத்தில் 185 பனை மரங்கள் நடப்பட்டன. மீதமுள்ள ஒரு ஏக்கரில் மியாவாக்கி முறையில் 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

சாந்தி பனை வனத்தில் பனை மற்றும் பனை உற்பத்திகளின் சிறப்பையும் பனை சாகுபடியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பனையகம் என்ற வள மையம் மற்றும் மாநாட்டு மண்டபமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் பனை பற்றிய விவரங்கள், பனையின் பயன்கள், பனை பயிரிடுதல் மற்றும் வளா்ப்பதற்கான வழிகள் மற்றும் பனை சாா்ந்த பொருள்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், செட்டிபாளையம் ஊராட்சித் தலைவரான என்.பி. சாந்திபிரசாத்துக்கு சிறுதுளி பசுமை விருது வழங்கப்பட்டது.

பனை பொருள்களை மட்டும் பயன்படுத்தி வள மைய கட்டடத்தை உருவாக்கிய கட்டட கலைஞா்களான சிபி மற்றும் உதயா ஆகியோரை சிறுதுளி குழுவினா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.