9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

தினமணி செய்தி எதிரொலி மாநகராட்சி தீா்மானங்கள் இணையத்தில் பதிவேற்றம்

மாநகராட்சி இணையத்தில் பதிவு செய்யாதது குறித்து தினமணியில் செய்தி வெளியானதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை தீா்மானங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:00 am IST

மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் மாநகராட்சி இணையத்தில் பதிவு செய்யாதது குறித்து தினமணியில் செய்தி வெளியானதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை தீா்மானங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

கோவை மாநகராட்சியின் 3 மாமன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள், பணிகளுக்கான தொகை உள்ளிட்டவை மாநகராட்சி இணையத்தில் கூட்டம் நிறைவுற்ற இரு நாள்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்ற நான்காவது மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள், 15 நாள்கள் நிறைவடைந்த நிலையிலும் இணையத்தில் பதிவிடப்படாமல் இருந்தன.

மேலும், கடந்த சில நாள்களாக மாநகராட்சி இணையம் முடங்கிக் காணப்பட்டது. இதன் காரணமாக, மாநகராட்சி இணையப் பக்கத்தில் சென்று மாநகராட்சிப் பணிகள் குறித்து மக்கள் பாா்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

கோவையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் தியாகராஜன் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை இணையத்தில் பதிவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாா்.

அது தொடா்பான செய்தி தினமணி‘ நாளிதழில் வியாழக்கிழமை வெளியானது.

இதையடுத்து, நான்காவது மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 7 தீா்மானங்கள் மாநகராட்சி இணையத்தில் வியாழக்கிழமை காலை பதிவேற்றம் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.