கோவை: முதன் முறையாக கோவையிலிருந்து தில்லி பட்டேல் நகர் வரையிலான வாராந்திர கார்கோ விரைவு ரயில் சேவை துவக்கப்பட்டது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாவட்டமாக கோவை உள்ளது. குறிப்பாக தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருள்கள் வெளி மாநிலங்களில் இருந்து அதிகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகிறது.

அதேபோல விவசாய விளைபொருள்கள், உணவு பொருள்கள் என அனைத்தும் ஏற்றுமதி செய்ய ஏதுவாக கோவை தெற்கு ரயில்வே கோவை முதல் தலைநகர் தில்லி பட்டேல் நகர் வரை முதன் முறையாக வாராந்திர பார்சல் கார்கோ விரைவு ரயில் சேவையை ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதையும் படிக்க: தில்லி தீ விபத்து: 2 பேர் கைது; கட்டிட உரிமையாளர் தலைமறைவு
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ரேனி குண்டா ஆகிய வழிதடங்களில் பர்செல் ரயில் சேவை இயக்கப்படுகிறது. அதேபோல அடுத்த மாதத்திலிருந்து வாரம் இரண்டு முறை பார்சல் ரயில் இயக்கப்படும் என பார்சல் ஏஜென்ஸிஸ் அனில் பரேஜா மற்றும் ரயில்வே துறையினர் அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராகுலுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!

எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து!

நீதித் துறை வரலாற்றில் புதிய சாதனை: ஒரே நேரத்தில் 4 பெண் தலைமை நீதிபதிகள்

அமெரிக்க படைகள் வாபஸ்! ஹோர்முஸை கடந்த 1.25 கோடி பீப்பாய் எண்ணெய் கப்பல்கள்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



