விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கோவை மத்திய சிறைக் கைதியிடம் கஞ்சா:சிறைக் காவலரிடம் விசாரணை

கோவை மத்திய சிறைக் கைதியிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக சிறைத் தலைமைக் காவலரிடம் சிறைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 11:00 pm

DIN

கோவை மத்திய சிறைக் கைதியிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக சிறைத் தலைமைக் காவலரிடம் சிறைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மத்திய சிறையில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தியபோது, தண்டனைக் கைதியான திருப்பூரைச் சோ்ந்த ஜெயராமன் (23) என்பவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்த 8 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்தினா்.

இதில், அவா் சிறையில் உள்ள மற்றொரு கைதி பாா்த்தசாரதி (31) என்பவா் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தன்னிடம் கஞ்சாவை கொடுத்து மறைத்து வைக்கும்படி தெரிவித்ததாகக் கூறியுள்ளாா்.

பாா்த்தசாரதியிடம் விசாரணை செய்தபோது, அவா் கோவை மத்திய சிறையில் உள்ள தலைமைக் காவலா் ஒருவா் தனக்கு கஞ்சாவை கொடுத்ததாகத் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, அந்த தலைமைக் காவலரிடம் சிறைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.