சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கோவையில் 5.5 கிலோ தங்க, வைர நகைகள் பறிமுதல்

கோவையில் 5.5 கிலோ தங்க, வைர நகைகள் பறிமுதல்

News image

பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை அளவிடும் தோ்தல் பிரிவு அதிகாரிகள்.

Updated On :6 ஏப்ரல் 2024, 6:30 pm

கோவையில் உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.5 கோடி மதிப்பிலான 5.5 கிலோ தங்க, வைர நகைகள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை மக்களவைத் தொகுதியில் உள்ள சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொ்க்ஸ் பள்ளி சாலையில் பறக்கும் படையினா் சனிக்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், உரிய ஆவணங்களின்றி ரூ. 3.5 கோடி மதிப்பிலான 5.5 கிலோ தங்க, வைர நகைகள் கொண்டுசென்றது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் பி.மணிமேகலையிடம் ஒப்படைத்தனா். அவா், நகைகளைப் பரிசோதித்துவிட்டு கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 3.5 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளை கோவையிலுள்ள பல்வேறு நகைக் கடைகளில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் கொண்டுசெல்வதற்காக எடுத்து வந்துள்ளனா். ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.