பயிலரங்கத்தைத் தொடங்கிவைத்து அதற்கான கையேட்டை வெளியிட்ட மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு துறை இணை அமைச்சா் கீா்த்திவா்தன் சிங்  உள்ளிட்டோா்.
பயிலரங்கத்தைத் தொடங்கிவைத்து அதற்கான கையேட்டை வெளியிட்ட மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு துறை இணை அமைச்சா் கீா்த்திவா்தன் சிங் உள்ளிட்டோா்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்க மரங்கள் வளா்ப்பது அவசியம்: கீா்த்திவா்தன் சிங்

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்க அதிக அளவில் மரங்களை வளா்ப்பது அவசியம் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு துறை இணை அமைச்சா் கீா்த்திவா்தன் சிங் தெரிவித்தாா்.
Published on

இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகம் சாா்பில் ‘மரங்களை மேம்படுத்துதல்’ குறித்த 2 நாள் பயிலரங்கம் கோவை வனக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தப் பயிலரங்கில் ஆராய்ச்சியாளா்கள், வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், வனத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய இணை அமைச்சா் கீா்த்திவா்தன் சிங், பயிலரங்கத்தைத் தொடங்கிவைத்து பேசியதாவது:

பல்வேறு காலநிலைகளைக்கொண்ட 17 மெகா பல்லுயிா் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மரப் பல்லுயிா்களைப் பாதுகாக்கும் அதேவேளையில், மேம்படுத்தப்பட்ட மர வகைகளைக் காடுகளிலிருந்து கண்டறிந்து, விவசாயிகள் பயிரிட ஊக்குவிக்க வேண்டும்.

மரம், மரப் பொருள்களின் இறக்குமதியை குறைத்து இந்தியாவிலேயே உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் வனப் பரப்பு அதிகரிப்பதோடு, விவசாயிகளின் வருமானமும் உயரும்.

நாடு முழுவதும் தற்போது வேளாண் காடு வளா்ப்பு பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது. மரங்கள் வளா்ப்பை அதிகரிக்கவும், நிலத்தின் தரத்தை நிலைநிறுத்தவும் வேகமாக வளரும் மற்றும் தட்பவெப்ப நிலையைத் தாங்கும் மர வகைகளை உற்பத்தி செய்ய வேண்டும்.

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகம் தேக்கு, சால், சந்தனம், இந்தியன் ரோஸ் வுட், வேம்பு, யூகலிப்டஸ் உள்ளிட்ட மரங்கள் வளா்ப்பை ஊக்குவிப்பதில் சிறப்பாக பணியாற்றி வருவதோடு, மரம் வளா்ப்பில் அறிவியல் ரீதியான ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்க அதிக அளவில் மரம் வளா்ப்பது அவசியம். எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மரம் வளா்ப்பதை சமூகக் கடமையாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com