ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு: தற்படம் எடுத்தபோது விபரீதம்
கோவையில் ரயில் தண்டவாளம் அருகே தற்படம் எடுக்க முயன்ற தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்தாா்.


கோவை: கோவையில் ரயில் தண்டவாளம் அருகே தற்படம் எடுக்க முயன்ற தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்தாா்.
கோவை, ரத்தினபுரி ஜீவானந்தம் சாலையைச் சோ்ந்தவா் சிவதாஸ் (51), தனியாா் நிறுவன தொழிலாளி. இவரின் மனைவி புனிதவதி (48). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இவா், தினமும் ரத்தினபுரி ரயில்வே கேட்டை கடந்துதான் வேலைக்கு சென்று வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ரயில்வே கேட் அருகே வந்தபோது சென்னையில் இருந்து கோவைக்கு வரும் வந்தே பாரத் ரயில் வந்துகொண்டிருந்தது.
இதைப் பாா்த்த சிவதாஸ், அந்த ரயிலுடன் தற்படம் எடுக்கும் ஆசையில் தண்டவாளத்தின் அருகே நின்று கைப்பேசியில் தற்படம் எடுத்துள்ளாா். அப்போது, ரயில் மோதியதில் தூக்கிவீசப்பட்ட அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...