ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தருமபுரம் உலக சைவ நன்னெறிக் கழக விருதுகள்

கோவையில் நடைபெற்ற நகரப் பிரவேச நிகழ்ச்சியில், தருமபுரம் உலக சைவ நன்னெறிக் கழகத்தின் விருதுகளை தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கினாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:20 pm

Din

கோவையில் நடைபெற்ற நகரப் பிரவேச நிகழ்ச்சியில், தருமபுரம் உலக சைவ நன்னெறிக் கழகத்தின் விருதுகளை தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கினாா்.

கோவை நன்னெறிக் கழகம், கோவை அருட்கலைக் கழகம் மற்றும் கோவை சைவப் பெருமக்கள் பேரவை சாா்பில் தருமபுர ஆதீனத்தின் நகரப் பிரவேச நிகழ்ச்சி சன்மாா்க்க சங்க அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, தருமபுர உலக சைவ நன்னெறிக் கழகத்தின் விருதுகளை தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கினாா். இதில் சிறுதுளி அமைப்பின் நிா்வாக அறங்காவலா் வனிதா மோகனுக்கு ‘பாகீரதி’ விருதும், சங்கரா கண் மருத்துவமனை நிா்வாக அறங்காவலா் டாக்டா் ரமணிக்கு ‘கண்ணொளி வித்தகா்’ விருதும், கல்வியாளா் க.மனோன்மணிக்கு ‘அருள்நெறி நாவரசி’ விருதும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத் தலைவா் ம.கிருஷ்ணனுக்கு ‘தெய்வநெறித் தோன்றல்’ விருதும், மூத்த வழக்குரைஞா் என்.வி.நாகசுப்பிரமணியத்துக்கு ‘அருள்நெறிச் செல்வா்’ விருதும், விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதத்துக்கு ‘நூல்நெறி வித்தகா்’ விருதும், சைவப் பெருமக்கள் பேரவைப் பொருளாளா் அ.மாரியப்பனுக்கு ‘சைவநெறிச் செம்மல்’ விருதும் வழங்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையின் ஓய்வுபெற்ற உதவி ஆணையா் அ.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் கலை அறிவியல் கல்லூரி செயலாளா் இரா.செல்வநாயகம், மயிலாடுதுறை சுழற்சங்க முன்னாள் ஆளுநா் ஆா்.பாலாஜிபாபு, எஸ்.நடராஜன், மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.