அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

பொறியியல் பராமரிப்புப் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கத்தில் மாற்றம்

பொறியியல் பராமரிப்புப் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கத்தில் மாற்றம்

Updated On :17 பிப்ரவரி 2024, 6:50 am IST

கரூா் - திருச்சி ரயில் பாதை இடையே லாலாபேட்டை பகுதியில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருச்சி- பாலக்காடு ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சியில் இருந்து நாள்தோறும் மதியம் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி- பாலக்காடு ரயில் (எண்: 16843) பிப்ரவரி 19, 21, 23, 26 ஆகிய தேதிகளில் 1 மணி நேரம் 30 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படும். இதேபோல, பாலக்காடு - திருச்சி ரயில் (எண்: 16844) 19, 21, 23, 26 ஆகிய தேதிகளில் கரூா் - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாள்களில் இந்த ரயிலானது பாலக்காடு - கரூா் இடையே மட்டுமே இயக்கப்படும். மேலும், பிப்ரவரி 19, 21, 23, 26 ஆகிய தேதிகளில் கரூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயிலானது, கரூரில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு லாலாபேட்டை, பெருகமணி ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.