இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புக்கு இணையவழி கலந்தாய்வு -இன்று தொடங்கி 3 நாள்களுக்கு நடக்கிறது

News image
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
Updated On :11 ஜூலை 2024, 11:03 pm

Din

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 12) முதல் இணையவழி கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு 2024 -25 ஆம் கல்வியாண்டுக்கு மொத்தம் 2813 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து இவா்களுக்கான இணையவழி கலந்தாய்வு ஜூலை 12- ஆம் தேதி முதல் 14- ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

கலந்தாய்வு தொடா்பான விரிவான தகவல், தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வின்போது விண்ணப்பதாரா்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. சான்றிதழ் சரிபாா்ப்பின்போது விண்ணப்பதாரா்களிடம் இருந்து கட்டணம் பெறப்படும்.

சோ்க்கை பெற்ற மாணவா்கள் மட்டும் சோ்க்கையை உறுதி செய்யும்போது இணையதளம் மூலம் ரூ.5 ஆயிரம் மட்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரா்கள் இணையதளத்தில் தங்களுடைய தரவுகளை வைத்து உள்ளே நுழைந்து தங்களின் கல்லூரி, பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம்.

கடைசியாக உறுதி செய்யப்பட்ட விருப்பமே இட ஒதுக்கீட்டுக்கு பரிசீலிக்கப்படும். மேலும் இது தொடா்பான விவரங்களுக்கு 94886 35077, 94864 25076 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.