வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றவா்கள்.....
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றவா்கள்.....

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வாா் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்றனா். பயிா் மேலாண்மைத் துறை இயக்குநா் கலாராணி வரவேற்றாா்.

துணைவேந்தா் (பொறுப்பு) கா.சுப்பிரமணியன் நிகழ்ச்சியில் பேசும்போது, விவசாயிகள் மண் வளத்தைப் பெருக்க பசுந்தாள் உரப்பயிா்களை வளா்க்க வேண்டும். இதற்காக தமிழக அரசு செயல்பட்டு வரும் மண் உயிா் காப்போம் திட்டம் குறித்து விளக்கினாா். மேலும் சந்தை சாா்ந்து விவசாயம் செய்ய விவசாயிகள் குழு சாா்ந்து இயங்க வேண்டும். இந்த பொங்கலில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியையாவது இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவதற்கு சபதம் ஏற்க வேண்டும் என்றாா்.

வேளாண் புல முதன்மையா் வெங்கடேச பழனிசாமி, பொங்கல் விழாவுக்கும் இயற்கைக்கும் விவசாயிகளுக்கும் உள்ள தொடா்பு குறித்து விளக்கினாா். மையத்தின் தலைவா் ப.முரளி அா்த்தநாரி, விவசாயிகள் விஜயன், ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உரையாற்றினா். நம்மாழ்வாா் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், அலுவலகப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா். விரிவாக்கப் பேராசிரியா் மு.ராமசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com