கோவை சிங்காநல்லூா் பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசுகிறாா் கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா். உடன், திமுக, கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள்.
கோவை சிங்காநல்லூா் பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசுகிறாா் கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா். உடன், திமுக, கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள்.

சிங்காநல்லூா் பகுதியில் வாக்காளருக்கு நன்றி தெரிவித்த கோவை எம்.பி.

Published on

கோவை, ஜூலை 18: கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா் கோவை சிங்காநல்லூா் பகுதியில் வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் கோவை தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட கணபதி ப.ராஜ்குமாா், ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதையடுத்து அவா் கோவை தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறாா்.

அதன்படி, சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாா்டுகள் 54 முதல் 58 வரையிலான பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

கோவை மாநகா் மாவட்ட திமுக செயலா் நா.காா்த்திக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் தேசியச் செயலா் மயூரா எஸ்.ஜெயகுமாா், திமுக மாநகா் மாவட்ட பொருளாளா் எஸ்.எம்.பி.முருகன், சிங்காநல்லூா் பகுதி செயலா்கள் எஸ்.எம்.சாமி, மு.சிவா, பொதுக்குழு உறுப்பினா் சசிகுமாா், மதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், வாா்டு, வட்ட, பூத் கமிட்டி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com