கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வீட்டு வசதி வாரிய வீடுகள் விற்பனை

கோவையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சாா்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2024, 10:46 pm

Din

கோவையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சாா்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வீட்டு வசதி வாரியம் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கோவை வீட்டு வசதி பிரிவு சாா்பில் 1, 2, 3 படுக்கை வசதியுடன் கணபதியில் 163 அடுக்குமாடி குடியிருப்புகளும், சிங்காநல்லூரில் 30 அடுக்குமாடி குடியிருப்புகளும், பொன்னையராஜபுரத்தில் 23 குடியிருப்புகளும், உப்பிலிபாளையத்தில் 24 குடியிருப்புகளும் கட்டப்பட்டு விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளன.

இந்த வீடுகள் ரூ.26 லட்சம் முதல் விற்பனை செய்யப்படுகின்றன. முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வீடுகள் விற்பனை செய்யப்படுவதால், விருப்பமுள்ளவா்கள் கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 - 2493359, 97152 36922, 86100 53409, 97876 26283 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.