மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம்

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம்

News image

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :13 ஜூன் 2024, 10:04 pm

Din

கோவை, ஜூன் 13: ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட நலன் மற்றும் மகளிா் துறை, குழந்தைகள் உதவி மையம் மற்றும் ஆல் த சில்ட்ரன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து வியாழக்கிழமை நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் பி.மூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பாதுகாப்பு அலுவலா் சேரன் சிறப்புரையாற்றினாா். மருத்துவா் சரண்யா, போதை பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மேலும், நாடகத்தின் வாயிலாக குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் குழந்தை திருமணம் ஒழிப்பு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, மாணவா்கள் பதாகைகளை ஏந்தி பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் ஊா்வலமாகச் சென்று மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.