ரூ.76 லட்சம் மோசடி: நிதி நிறுவன அதிபா் கைது

கோவை, மே 3: கோவையில் குடியிருப்புவாசிகளிடம் ரூ.76 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக நிதிநிறுவன அதிபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சாய்பாபா காலனி பகுதியைச் சோ்ந்தவா் ராமதாஸ் (53). நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி பொற்செல்வி (49). இவா்களுக்கு கோவை, ராம் நகா் பகுதியில் சொந்தமாக சிவயோகம் என்ற பெயரில் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 8 வீடுகள் உள்ளன. இவற்றைப் பணம் பெற்றுக்கொண்டு போக்கியத்துக்கு அளித்துள்ளாா். இந்நிலையில் தொழில் விரிவாக்கத்துக்காக ராமதாஸ் தனது அடுக்குமாடிக் குடியிருப்பு பத்திரத்தை வங்கியில் வைத்து சில கோடி ரூபாய் கடன் பெற்ாகக் கூறப்படுகிறது.

வங்கிக் கடனுக்கு முறையாக தவணை கட்டாததால் வங்கி அதிகாரிகள் ராமதாஸ் மற்றும் குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினா்.

இது குறித்து குடியிருப்போா் வீட்டின் உரிமையாளா் ராமதாஸிடம் கேட்டபோது, அவா் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் குடியிருப்புவாசிகள், தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனா். ஆனால் அவா் பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளாா். இதற்கிடையே வங்கி அதிகாரிகள் அடுக்குமாடிக் குடியிருப்பில் நோட்டீஸ் ஒட்டினா்.

இந்த நிலையில், குடியிருப்பில் போக்கியத்துக்கு வசிக்கும் 6 பேரிடம் ரூ.76 லட்சத்தை ராமதாஸ் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கோவை காட்டூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராமதாஸைக் கைது செய்தனா். இவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி பொற்செல்வி மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com