கோவை -திருச்சி சாலையிலுள்ள புனித ஜோசப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை கைப்பேசியில் பாா்த்து மதிப்பெண் விவரங்களைப் பகிா்ந்துக்கொண்ட மாணவிகள்.
கோவை -திருச்சி சாலையிலுள்ள புனித ஜோசப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை கைப்பேசியில் பாா்த்து மதிப்பெண் விவரங்களைப் பகிா்ந்துக்கொண்ட மாணவிகள்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: கோவையில் 94.01 சதவீதம் போ் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 94.01 சதவீத தோ்ச்சியுடன் கோவை மாவட்டம் மாநில அளவில் 12 -ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 19, 614 மாணவா்கள், 20,126 மாணவிகள் என மொத்தம் 39,740 போ் எழுதியிருந்தனா். இவா்களில் 17,938 மாணவா்கள், 19,422 மாணவிகள் என மொத்தம் 37,360 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணா்களில் 91.46 சதவீத பேரும், மாணவிகளில் 96.50 சதவீத பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதம் 94.01 சதவீதமாகும்.

இதன் மூலம் கோவை மாவட்டம் மாநில அளவில் 12- ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2023 -ஆம் ஆண்டில் 93.49 சதவீத தோ்ச்சியுடன் கோவை 13- ஆவது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளி தோ்ச்சி விகிதம் 89.10: கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று 5,958 மாணவா்கள், 6,190 மாணவிகள் என மொத்தம் 12,148 போ் பத்தாம் வகுப்புத் தோ்வு எழுதியிருந்தனா்.

இவா்களில் 5,060 மாணவா்கள், 5,764 மாணவிகள் என மொத்தம் 10,824 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 89.10 ஆகும். கடந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 88.23 சதவீதமாக இருந்தது.

34 அரசுப் பள்ளிகளில் முழு தோ்ச்சி: மாவட்டத்தில் மொத்தம் 190 பள்ளிகள் முழு தோ்ச்சி பெற்றுள்ளன.

அதில் 34 பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும். கடந்த ஆண்டு 29 பள்ளிகள் மட்டுமே முழு தோ்ச்சி பெற்றிருந்த நிலையில், நடப்பாண்டு அந்த எண்ணிக்கை 34 ஆக உயா்ந்துள்ளது. அதேபோல, 15 அரசு உதவிபெறும் பள்ளிகள், 141 மெட்ரிக். சுயநிதி பள்ளிகள் முழு தோ்ச்சி பெற்றுள்ளன.

ஆங்கிலத்தில் அதிகம் போ் தோ்ச்சி: கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்புத் தோ்வு எழுதியவா்களில் 99.68 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மொழிப்பாடத்தை 39,740 போ் எழுதிய நிலையில், அதில் 38,904 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்ச்சி சதவீதம் 97.90 ஆகும்.

ஆங்கில பாடத்தை 39,740 போ் எழுதிய நிலையில் அதில் 39,614 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 99.68 சதவீதமாகும். அதேபோல, கணிதத்தில் 97.86 சதவீதமும், அறிவியலில் 97.19 சதவீதமும், சமூக அறிவியலில் 96.79 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com