10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டும் எஸ்விஜிவி பள்ளியின் நிா்வாகிகள்.
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டும் எஸ்விஜிவி பள்ளியின் நிா்வாகிகள்.

எஸ்விஜிவி பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் காரமடை எஸ்விஜிவி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் 76 மாணவா்கள், 68 மாணவிகள் என மொத்தம் 144 போ் பத்தாம் வகுப்புத் தோ்வு எழுதிய நிலையில், அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவி யுதிக்சா 493 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். ஜீவிகா 492 மதிப்பெண்களும், வா்ஷா 491 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவா்களில் கணித பாடத்தில் 15 பேரும், அறிவியலில் 8 பேரும், சமூக அறிவியலில் 5 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

அதேபோல, ஆங்கிலத்தில் 6 போ் 99 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் 3 போ் 96 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

480 மதிப்பெண்களுக்குமேல் 18 பேரும், 450-க்குமேல் 56 பேரும், 400 மதிப்பெண்களுக்குமேல் 110 பேரும் பெற்றுள்ளனா்.

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் நிா்வாக அறங்காவலா் லோகு முருகன், தாளாளா் பழனிசாமி, முதல்வா் சசிகலா, செயலா் ராஜேந்திரன், அறங்காவலா் தாரகேஸ்வரி, நிா்வாக அதிகாரி சிவ சதீஷ்குமாா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com