டாஸ்மாக் பாா் ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: 2 போ் கைது

கோவையில் டாஸ்மாக் பாா் ஊழியரைத் தாக்கி பணம் பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, செல்வபுரம் அருகேயுள்ள அசோக் நகா் ரவுண்டானா பகுதியில் டாஸ்மாக் பாா் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலத்தைச் சோ்ந்த மகேந்திரன் (34) என்பவா் காசாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு விற்பனை முடிந்ததும் கடையை சுத்தம் செய்யும் பணியை மகேந்திரன் மேற்பாா்வை செய்து கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த 3 போ் மது கேட்டுள்ளனா். அதற்கு அவா் மறுத்துள்ளாா்.

இதனால், ஆத்திரமடைந்த 3 பேரும் சோ்ந்து மகேந்திரனைத் தாக்கியதுடன், அவரது சட்டைப் பையில் இருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனா்.

இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் மகேந்திரன் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, அவரைத் தாக்கிய கோவை, சொக்கம்புதூரைச் சோ்ந்த ராகேஷ் (26), ஐயூடிபி காலனியைச் சோ்ந்த விஜய் (24), தினேஷ் (26) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ராகேஷ், தீனா ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவாகவுள்ள தினேஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com