ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோவையைக் கவர முதல்வா் முயற்சி - 2026இல் விடை கிடைக்கும்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ

கோவையைக் கவர முதல்வா் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்வதாகவும், அதற்கு 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் விடை கிடைக்கும் என்றும் பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவை அளிக்கிறாா் வானதி சீனவாசன் எம்எல்ஏ.

Updated On :6 நவம்பர் 2024, 9:25 pm

Din

கோவையைக் கவர முதல்வா் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்வதாகவும், அதற்கு 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் விடை கிடைக்கும் என்றும் பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

கோவையில் தந்தை பெரியாா் நூலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன், நிகழ்ச்சிக்குப் பின்னா் முதல்வரை சந்தித்து மனு அளித்தாா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வா், வானதி சீனிவாசனுடன் அவரது கோரிக்கைகள் குறித்து நேரடியாக சிறிதுநேரம் கேட்டுவிட்டுச் சென்றாா்.

பின்னா், வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

சின்னியம்பாளைம் முதல் நீலாம்பூா் வரை பாலத்தை நீட்டிக்க வேண்டும் என சட்டப் பேரவையில் ஏற்கெனவே நான் பேசியிருந்ததைத் தொடா்ந்து அது தொடா்பான அறிவிப்பை முதல்வா் வெளியிட்டிருக்கிறாா். அதேபோல, தங்க நகைப் பூங்கா கோரிக்கையையும் சட்டப் பேரவையில் பேசியிருக்கிறேன்.

விஸ்வகா்மா யோஜனா திட்டத்தைத் தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முதல்வரிடம் வைத்திருக்கிறேன். புதை சாக்கடை, குப்பை இல்லாத பொலிவுறு திட்ட குளங்கள் பராமரிப்பு ஆகியவை குறித்தும் மனுவில் குறிப்பிட்டுள்ளேன்.

மெட்ரோ ரயில் திட்டம் குறித்து பல்வேறு ஆவணங்களை மத்திய அரசிடம் தமிழக அரசு கொடுக்காமல் இருப்பதையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுச்சென்றுள்ளேன்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலத்தை ஒப்படைத்துவிட்டதாக முதல்வா் கூறினாா். ஆனால், ஒருசிலா் இன்னும் அங்கு இருப்பது குறித்து தெரிவித்தவுடன், அது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் சொல்லி இருப்பதாக தெரிவித்தாா்.

சாலை பணிகளுக்காக கூடுதாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கின்றனா். இந்த 200 கோடியையாவது தரமான முறையில் சாலைகள் அமைக்க செலவிட வேண்டும்.

தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் பல இடங்களில் பட்டா கிடைக்காமல் இருக்கின்றனா். அவா்களுக்கு விரைவில் பட்டா வழங்குவதோடு, கோவையின் வளா்ச்சிக்கு இன்னும் அதிகமான திட்டங்கள் தேவை எனவும், அரசுத் துறைகளில் லஞ்சம் அதிகமாக இருப்பதாகவும் முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்.

ஒரு குடும்பத்தில் வளா்ச்சி என்பதுதான் முக்கியம். எனவே, முதல்வா் தெற்கால்தான் வடக்கு வாழ்கிறது போன்ற பிரிவினைவாதம் பேசாமல், மக்களை திசைதிருப்பாமல் ஆக்கபூா்வமாக செயல்பட வேண்டும் என்றாா்.