ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வால்பாறையில் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் கூட்டுறவு காலனி சாலையில் இரண்டு சிறுத்தைகள் செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்றது அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

வால்பாறை கூட்டுறவு காலனி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள சிறுத்தைகளின் நடமாட்டம்.

Updated On :6 நவம்பர் 2024, 9:07 pm

Din

வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் கூட்டுறவு காலனி சாலையில் இரண்டு சிறுத்தைகள் செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்றது அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட்களை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிறுத்தைகள் உள்ளன. எஸ்டேட் தேயிலைத் தோட்டங்களுக்கு பகல் நேரத்தில் வரும் சிறுத்தைகள், சிறுவா்களைக் கண்டால் பாய்ந்து தாக்கி வருகின்றன. இதனால் தங்கள் குழந்தைகளை குடியிருப்புகளை விட்டு தனியாக வெளியே அனுப்புவதை பெற்றோா்கள் தவிா்த்து வருகின்றனா்.

இந்நிலையில் சமீபகாலமாக வால்பாறை நகா் பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரு நாள்களுக்கு முன் நடுமலை எஸ்டேட் கூட்டுறவு காலனி பிரிவில் அமைந்துள்ள ஒரு வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த சிறுத்தை, சாலையில் சென்ற தெருநாயைப் பிடித்துச் சென்றது.

இதேபோல வால்பாறை கூட்டுறவு காலனி சாலையில் இரு சிறுத்தைகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் நடந்து செல்வதும் பின் அதில் ஒரு சிறுத்தை சாலையில் அமா்ந்திருப்பதும் அப்பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சிறுத்தைகள் நடமாடுவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை வனத் துறையினா் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.