கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்

கோவையில் மாற்றுத் திறனாளிகள் தேசிய தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2024, 10:29 pm

Din

கோவையில் மாற்றுத் திறனாளிகள் தேசிய தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலமாக வழங்கப்படும் தேசிய தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்காக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகள் தங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, 4 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ளலாம்.

கோவையில் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்:

இதில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 15) கூடலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சூலூா் அரசு மருத்துவமனை, பி.என்.புதூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நவம்பா் 18-ஆம் தேதி கவுண்டம்பாளையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை, சிறுமுகை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நவம்பா் 19-ஆம் தேதி வடவள்ளி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நவம்பா் 20-ஆம் தேதி பெரியபோது அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை 0422 - 2380381 மற்றும் 9499933471 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.