கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு: தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:21 pm

Din

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அமைப்பின் மாவட்டச் செயலா் சி.அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ரமணி என்பவா் இளைஞா் ஒருவரால் பள்ளி வளாகத்தில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

ஆசிரியா்களுக்கு எதிரான இதுபோன்ற செயல்களை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வன்மையாகக் கண்டிப்பதுடன், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதவாறு ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க தமிழக அரசும், கல்வித் துறையும் முன்வர வேண்டும்.

மேலும் கொலை செய்த நபருக்கு கடுமையான தண்டனை வாங்கிக் கொடுத்து இதுபோன்ற செயல்களை யாரும் செய்ய முன்வராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா். மேலும் இந்த சம்பவத்தைக் கண்டித்து வியாழக்கிழமை (நவம்பா் 21) தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றுவாா்கள் எனவும் தெரிவித்துள்ளாா்.