பருவமழை பாதிப்பு - தயாா் நிலையில் மின்வாரியக் குழுவினா்: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி
வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு முழுவதும் மின்வாரியக் குழுவினா் தயாா் நிலையில் உள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

சிங்காநல்லூா் அருகே 61-ஆவது வாா்டுக்கு உள்பட்ட கள்ளிமடை காா்டன் பகுதியில் வாய்க்காலில் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணிகளை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மழையால் சேதமடைந்த அங்குள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் சாலையை சீரமைத்து தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதைத்தொடா்ந்து, அப்பகுதிக்கு சென்று பாா்வையிட்ட அமைச்சா், சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து, சாலை சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. காலையில் கூறிய புகாருக்கு, மாலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.










