இ-சேவை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைக்கிறாா் நீதித் துறை நடுவா் த. மீனாட்சி.
இ-சேவை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைக்கிறாா் நீதித் துறை நடுவா் த. மீனாட்சி.

வால்பாறை நீதிமன்றத்தில் இ-சேவை மையம் திறப்பு

வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் இ-சேவை மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
Published on

வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் இ-சேவை மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

நீதிமன்ற வழக்குகள் இணைய வழியில் தாக்கல் செய்யும் முறை அமலில் உள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீதிமன்றங்களில் இணைய வழியில் தாக்கல் செய்வதற்காக நீதிமன்ற வளாகத்திலேயே இ-சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் இ-சேவை மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. வால்பாறை நீதிமன்ற நீதித் துறை நடுவா் த.மீனாட்சி ரிப்பன் வெட்டி இ-சேவை மையத்தைத் திறந்துவைத்தாா்.

இதில் வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com